/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
குன்னுாரில் ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 13, 2025 08:19 PM
குன்னுார்: ரயில்வே தொழிலாளர்களுக்கு, 9வது ஊதிய குழுவை அமல்படுத்த கோரி, குன்னுார் ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ரயில்வே டி.ஆர்.இ.யு., கிளை தலைவர் பெரோஸ்கான் தலைமை வகித்தார். செயலாளர் ரபீக் வரவேற்றார்.
சி .ஐ.டி. யு., மாவட்ட செயலாளர் வினோத் கோரிக்கையை விளக்கி பேசினார். அதில், 'ரயில்வே தொழிலாளர்களுக்கு, 9வது ஊதிய குழுவை அமல்படுத்துவது; இடைபட்ட காலத்திற்கு, 30 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்குவது; அடிப்படை சம்பளத்தில், 50 சதவீதம் பஞ்சப்படி இணைக்க கோருவது; 30 சதவீத இடைக்கால நிவாரண உயர்வை ஓய்வூதியர்களுக்கு வழங்க கோருவது,' உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 75 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். பொருளாளர் பழனிசாமி நன்றி கூறினார்.

