/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியின கிராமங்களில் மழை சேதம்: அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு
/
பழங்குடியின கிராமங்களில் மழை சேதம்: அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு
பழங்குடியின கிராமங்களில் மழை சேதம்: அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு
பழங்குடியின கிராமங்களில் மழை சேதம்: அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 23, 2025 10:34 PM
கோத்தகிரி: - கோத்தகிரியில் பழங்குடியின கிராமங்களில் ஏற்பட்ட மழை சேதத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கோத்தகிரி சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாட்களாக, வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், துரித நடவடிக்கை எடுத்து, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் குஞ்சப்பனை ஊராட்சிக்கு உட்பட்ட, அரையூர் பழங்குடியினர் கிராமத்தில், சாலைகள், வீடுகள் மழையால் பாதிக்கப்பட்டது.
சேதங்களை நேரில் பார்வையிட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, அரையூர்மட்டம் -- அரையூர் மற்றும் காக்கா குண்டு இடையே சாலையை சீரமைக்க, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர் ஆணை தயார் செய்யுமாறு துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பிரதான் மந்திரி ஜென்ம திட்டத்தின் கீழ், தலா, 5.73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பத்து வீடுகள் கட்டப்படும் இடங்களையும், அரையூர் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் ஏற்பட்ட சிறிய அளவிலான மண் சரிவை, ஊராட்சி சார்பில் சரி செய்யப்பட்டதையும் ஆய்வு செய்தார். சேதம் அடைந்த, மூன்று வீடுகளின் உரிமையாளர்களுக்கு, தலா, 8 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை கிடைத்ததா என்பதையும் உறுதி செய்தார்.
இந்த ஆய்வின் போது, தாசில்தார் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் உட்பட, அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

