தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தூர் வாரப்படாத ஓடையால் மழை: நீரை சேமிப்பதில் சிக்கல்

தூர் வாரப்படாத ஓடையால் மழை: நீரை சேமிப்பதில் சிக்கல்

தூர் வாரப்படாத ஓடையால் மழை: நீரை சேமிப்பதில் சிக்கல்


ADDED : நவ 03, 2025 10:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 03, 2025 10:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரி குடிமனை ஓடை தூர்வாராததால், வறட்சி நாட்களில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாது நிலை ஏற்பட்டுள்ளது.

கோத்தகிரி குருவேனு ஹள்ளா நீர் பிடிப்பு பகுதிக்கு, முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும், குடிமனை நீரோடை, சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது.

இதனால், மழை நாட்களில் விரயமாகும் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது.

குருவேனு ஹள்ளா நீர் பிடிப்பு பகுதிக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் இந்த நீர் ஆதாரத்தை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மலை காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர்.

வறட்சி நாட்களிலும் வற்றாத குருவேனு ஹள்ளா நீர்ப்பிடிப்பு பகுதிக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த நீரோடை, தூர் வாரப்படாத நிலையில், தண்ணீர் மாசடைந்து வருகிறது.

ஓடையின் ஆழமும் அகலமும் வெகுவாக குறையும் அளவுக்கு, காட்டுச் செடிகள் மற்றும் புற்கள் ஆக்கிரமித்துள்ளதால், மழை நாட்களில் தண்ணீரை முழுமையாக சேமிக்க முடியாத நிலை உள்ளது. இந்த ஓடை தண்ணீரை நம்பியுள்ள விவசாயிகள், வறட்சி நாட்களில், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், கவலை அடைந்துள்ளனர்.

எனவே, விவசாயிகள் நலன் கருதி, சம்பந்தப்பட்ட துறையினர், முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஓடையை தூர்வார நடவடிக்கை எடுப்பது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us