ADDED : நவ 15, 2024 09:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி ; ஊட்டியில் நேற்று மாலையில் ஒரு மணிநேரம் பெய்த கனமழையால் கடும் குளிரான காலநிலை நிலவியது.
ஊட்டியில் நேற்று காலை முதல் மேக மூட்டமான காலநிலை நிலவியது. மாலை, 5:00 மணிமுதல் 6:00 மணிவரை கனமழை பெய்தது. நகரின் சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் மக்கள் நடமாடுவதில் சிக்கல் ஏற்பட்டது. பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவியர் வீடுகளுக்கு செல்ல சிரமப்பட்டனர்.
கடும் குளிரான காலநிலை நிலவியதால், ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.