/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் ஓடும் மழைநீர்; கற்கள் பெயர்ந்து பாதிப்பு
/
சாலையில் ஓடும் மழைநீர்; கற்கள் பெயர்ந்து பாதிப்பு
ADDED : ஆக 06, 2025 08:52 PM

குன்னுார்; குன்னுார் அருவங்காடு ஜெகதளா சாலையோர கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, சாலையில் ஓடும் மழை நீரால் வாகனங்கள் செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குன்னுார் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் இருந்து வெளிவரும் மழை நீர் ஜெகதளா சாலையில், சுத்திகரிப்பு நிலையம் அருகே கால்வாய் வழியாக ஒசட்டி பகுதியில் உள்ள ஓடையில் கலக்கிறது.
மழை நீர் மற்றும் குடிநீர் தொட்டியில் இருந்து வெளியேறும் தண்ணீர் இந்த கால்வாய் வழியாக செல்கிறது. ஒரு நாள் பெய்த மழையால், பெருக்கெடுத்த வெள்ளம் சாலையில் ஓடியது. அதில், சாலையின் கற்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்வதிலும் பாதிப்பு ஏற்படுகிறது. மழை காலங்களில் மக்கள் நடந்து செல்லவும் சிரமம் ஏற்படுகிறது.
மக்கள் கூறுகையில், 'வெடி மருந்து தொழிற்சாலையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடத்தில், மழை நீர் முறையாக கால்வாய் வழியாக செல்ல சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.