/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஸ் ஸ்டாண்டில் தேங்கும் மழைநீர்: பயணிகள் அதிருப்தி
/
பஸ் ஸ்டாண்டில் தேங்கும் மழைநீர்: பயணிகள் அதிருப்தி
பஸ் ஸ்டாண்டில் தேங்கும் மழைநீர்: பயணிகள் அதிருப்தி
பஸ் ஸ்டாண்டில் தேங்கும் மழைநீர்: பயணிகள் அதிருப்தி
ADDED : அக் 10, 2024 11:37 PM

கூடலுார் : கூடலுார் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மழைநீர் தேங்குவதால் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கூடலுாரில், பழைய பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டு, புதிதாக அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட், கடந்த பிப்., 25ம் தேதி முதல் திறந்து செயல்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்ட் பணிகள் முழுமையாக, நிறைவு பெறாததால், மழை காலங்களில் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தேங்கும் மழைநீர் சேறும் சக்தியாக மாறி, பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை சீரமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம், மாலை கூடலுாரில் பெய்த பலத்த மழையின் போது, பஸ் ஸ்டாண்டில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி சேறும் சகதியமாக மாறியதால், பயணிகள் நடந்து செல்லவே சிரமப்பட்டனர்.
பயணிகள் கூறுகையில், 'மழை காலங்களில் ஏற்படும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண போக்குவரத்து துறை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

