/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கடலில் கலந்து வீணாகும் மழைநீர்: சேமித்தால் பயன்
/
கடலில் கலந்து வீணாகும் மழைநீர்: சேமித்தால் பயன்
ADDED : செப் 11, 2025 09:12 PM

கூடலுார்; 'கூடலுாரில் பாண்டியார்- புன்னம்புழா ஆற்று நீர், கேரளா சாலியாறு வழியாக, சென்று கடலில் கலந்து வீணாகுவதை தவிர்த்து, விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலுார்- கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதனால், கேரளா போன்று, கூடலுாரில் ஆண்டு தோறும் ஜூன் துவங்கி நவ., வரை தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
கூடலுார் மழை நீரை சேமிக்க எந்த வசதியும் இல்லாததால், மழைநீர் பாண்டியார் - புன்னம்புழா ஆறு வழியாக கேரளா சாலியார் ஆற்றில் இணைந்து, அரபி கடலில் கலந்து வீணாகிறது. நடுப்பாண்டி ஏப்., மே மாதத்தில் எதிர்பார்தததை விட கூடுதலாக கோடை மழை பெய்து. தொடர்ந்து, ஜூன் மாதம் துவங்கிய தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இங்கு வீணாகும், மழை நீரை சேமித்து, கோடையில் பயன்படுத்த, எந்த வசதியும் இல்லை.
இதனால், கூடலுாரில் ஆண்டுக்கு ஆறு மாதம் மழை பெய்தாலும், கோடையில் பொதுமக்களுக்கும், வனவிலங்குகளுக்கும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. மழை நீரை சேமிப்பு, ஆறுகளை இணைப்பு மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். விவசாயிகள் கூறுகையில், 'கூடலுாரில் கேரளாவிலும் ஒரே நேரத்தில் பருவ மழை பெய்து வருகிறது. பருவமழையின் போது கேரளாவிலும் தண்ணீர் தேவை இருக்காது.
இதனால், மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது. இதனை தடுக்க அரசு, மழைநீரை சேமிப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், கூடலுாரில் உற்பத்தியாகும் பாண்டியார் புன்னம்புழா, மாயார் ஆறுகளை இணைக்க வேண்டும்.
இதன் மூலம், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியும். காடுகளும் வளமாக இருக்கும். அரசு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.