/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பகவதி அம்மன் கோவிலில் ரக் ஷா பந்தன்: சிறுவர், சிறுமியர் ராக்கி கட்டி மகிழ்ச்சி

ADDED : ஆக 10, 2025 09:25 PM

கூடலுார்; கூடலுார் தொரப்பள்ளி குனில் பகுதியில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் ஸ்ரீபகவதி அம்மன் கோவிலில் ரக் ஷா பந்தன் விழா நடந்தது.
சகோதர, சகோதரிகளிடையே பாசப்பிணைப்பினை வெளிப்படுத்தும் வகையில், ரக்ஷா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் நேற்று முன்தினம், கொண்டாடினர்.
இதன் ஒரு பகுதியாக, கூடலுார் தொரப்பள்ளி, குனில் பகுதியில் உள்ள ஸ்ரீபகவதி அம்மன் கோவிலில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நேற்று ரக் ஷா பந்தன் விழா நடந்தது. கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, ஆ.எஸ்.எஸ்., பொறுப்பாளர் ராஜேஷ், அருண், பா.ஜ., கூடலுார் வடக்கு ஒன்றிய பொது செயலாளர் நாராயணன் ஆகியோர் குழந்தைகளுக்கு இனிப்பு, ராக்கி, வழங்கி ரக் ஷா பந்தன் விழா முக்கியத்துவம் குறித்து விளக்கினர். தொடர்ந்து, குழந்தைகள், சகோதர, சகோதரி பாசப்பிணைப்பினை வெளிப்படுத்தும் வகையில் ராக்கி கட்டி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.