/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் ராமகோபாலன் 98வது பிறந்தநாள் விழா
/
ஊட்டியில் ராமகோபாலன் 98வது பிறந்தநாள் விழா
ADDED : செப் 19, 2025 08:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன், 98 வது பிறந்தநாள் விழா, ஊட்டி காபிஹவுஸ் பகுதியில் நடந்தது.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுப்ரமணி, மாவட்ட பொருளாளர் கார்த்திக், இந்து முன்னணி வியாபாரிகள் நலச் சங்க அமைப்பாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், ராமகோபாலன் படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, ஊட்டி அரசு மருத்துவமனையில், இந்து முன்னணி நிர்வாகிகள் சார்பில் ரத்த தானம் செய்யப்பட்டது.
பொது இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. நிர்வாகி விஜி நன்றி கூறினார்.