/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு 16 ஆண்டு சிறை
/
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு 16 ஆண்டு சிறை
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு 16 ஆண்டு சிறை
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு 16 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 29, 2025 07:56 PM

பாலக்காடு; பாலக்காட்டில், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு, 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெம்மாரா அயிலூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகனன், 47. இவர், 2020 மார்ச் 12ம் தேதி நெம்மாரா போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள பெண்ணை, வீட்டில் யாரும் இல்லாத போது, அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நெம்மாரா போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனனை கைது செய்தனர்.
குற்றப்பத்திரிகை சமர்ப்பித்த நிலையில், இந்த வழக்கு நேற்று ஆலத்தூர் விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி சந்தோஷ் வேணு, குற்றவாளிக்கு பல்வேறு சட்ட பிரிவுகளில், 16 ஆண்டுகள்  சிறை தண்டனையும், 1.60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வக்கீலாக பிந்து ஆஜரானார்.

