தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அரியவகை பழங்கள்!

 அரியவகை பழங்கள்!

 அரியவகை பழங்கள்!


ADDED : ஜன 08, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2026 05:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அழிவின் பிடியில் நீலகிரியில் விளையும்... முதல்முறையாக சிம்ஸ் பூங்காவில் நாற்று உற்பத்தி

குன்னுார்: -: நீலகிரி உயிர்சூழல் மண்டலத்தில் மட்டுமே விளைந்து, வன உயிரினங்களுக்கு உணவாக பயன்படும், பல்வேறு அரிய பழங்களை அழிவில் இருந்து காக்கும் வகையில், சிம்ஸ் பூங்கா நர்சரியில் நாற்றுக்கள் தயார் செய்யும் பணி முதன் முறையாக துவக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் சிறந்த தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப ஏராளமான பழ பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இங்குள்ள வனப்பகுதிகளில், தவிட்டுப் பழம், ஊசிக்கலா, அத்தி, குரங்கு பழம், விக்கி, நாவல், ஊட்டி ஆரஞ்சு, விலாத்தி, முள்ளு பழம், நாவல், மஞ்சள் முழாம் புனுகு, கோவக்கா, கிச்சலி உட்பட, 50க்கும் மேற்பட்ட பழங்கள் விளைகின்றன. இவை பல வன உயிரினங்களுக்கு முக்கிய உ ணவாக பயன்படுகிறது.

இதை தவிர, ஊட்டி, குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் பிளம்ஸ், பேரி, பெ ர்சிமென், ரம்புட்டான், துரியன், ஊட்டி ஆப்பிள், சீமை கொய்யா, உட்பட வெளிநாட்டு பழங்களும் விளைகின்றன. கடந்த காலங்களில், 5,000 ஏக்கருக்கு மேல் விளைந்த இவ்வகை பழங்கள், வன விலங்குகள் பிரச்னை, காலநிலை மாற்றம் உட்பட பல்வேறு காரணங்களால், சில ஏக்கர் பரப்பில் மட்டும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அழியும் அரியவகை பழங்கள் இந்நிலையில், வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்கள், பழங்களை பறித்து வந்து பலரும் விற்பனை செய்வது, காட்டுதீ மற்றும் காலநிலை மாற்றத்தால் சோலை வனங்கள் அழிவு போன்ற காரணங்களால், பல்வேறு அரியவகை பழங்கள் அழிவின் பிடியில் உள்ளன. இதன் விதைகளை கொண்டு, திசுவளர்ப்பு மூறையில், நாற்றுகளாக வளர்த்து வளர்க்கவும், விற்பனை செய்யவும் முயற்சிகள் நடந்ததாக தெரியவில்லை. குன்னுார் பழப்பண்ணையில், பேரி, பீச், மாதுளம், சீத்தாபழம் உட்பட பல்வேறு நாற்றுக்கள் தயார் செய்யப்படுகிறது.

சிம்ஸ் பூங்காவில் முதல் முயற்சி இந்நிலையில், குன்னுார் சிம்ஸ் பூங்கா, நர்சரியில் முதல்முறையாக 'விக்கி' பழங்களின் நாற்றுக்கள் தயார் செய்யும் முயற்சி நடந்துள்ளது. இதை தவிர, மேலும் பல்வேறு பழங்களின் விதைகளின் மூலம் நாற்றுகளை உற்பத்தி செய்யவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

சிம்ஸ்பூங்கா மேலாளர் லட்சுமணன் கூறுகையில்,''கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இங்குள்ள பழமை வாய்ந்த விக்கி பழங்களின் விதைகளிலிருந்து நாற்றுக்களை இயற்கை முறையில் தயார் செய்யும் முயற்சி நடந்தது.

தற்போது, 300க்கும் மேற்பட்ட தொட்டிகளில் இவை தயார் நிலையில் விற்பனைக்கு உள்ளது. இதனை விவசாயிகள் வாங்கி பழ மரங்களை வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஒரு நாற்றக்கு, 150 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் பிற அரியவகை பழங்களின் நாற்றுகளை உற்பத்தி செய்து, அழிவில் இருந்து காக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவை மட்டுமின்றி பிற சோலை மர நாற்றுகள், ஞாயிறு மட்டும் நர்சரியில் விற்பனை செய்யப்படுகிறது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us