/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பள்ளியில் நடந்த கருத்தரங்கில் அரிய தகவல்
/
அரசு பள்ளியில் நடந்த கருத்தரங்கில் அரிய தகவல்
ADDED : ஜூலை 13, 2025 08:28 PM

கோத்தகிரி; கோத்தகிரி பாக்கயாநகர் அரசு பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், அறிவியல் கருத்தரங்கு நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமை வகித்தார்.
அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
அனைத்து உயிர்களின் மரபணு தொழில்நுட்பம், தற்போது மருத்துவம் மற்றும் விவசாய துறைகளில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகிறது. மனித மரபணுவில் ஏ.டி.ஜி.சி., என்ற நான்கு புரோட்டீர்களான, 35.5 கோடி எழுத்துக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு கம்ப்யூட்டரில், 0, 1 மொழியாக செயல்படுவது போல, மரபணுவில் இந்த நான்கு எழுத்துக்கள், நமது உடலின் அனைத்து பாகங்களின் செயல்பாடுகளையும், தகவல்களையும் நிர்ணயிக்கிறது.
சமீபத்தில், இந்திய மக்களின் மூதாதையர்களை கண்டறியும் முயற்சியில் பல்வேறு இன குழுக்களை சேர்ந்த, 25 ஆயிரம் இந்தியர்களின் மரபணுக்கள் ஆய்வு செய்யப்பட்டன.
அதிலிருந்து கிடைத்த தகவல்களில், 'அனைத்து இந்திய மக்களும் மூன்று இன குழுக்களில் கலப்பினம்,' என, கண்டறியப்பட்டுள்ளது. நாம் அன்றாடம் கூறும் திராவிடர்கள், ஆரியர்கள் மற்றும் முகலாயர்கள் தான் அந்த மூன்று இனக்குழுக்கள். தற்போது, நம் நாட்டின் நிலவும் ஆயிரக்கணக்கான சாதிகளும், இனங்களும் அவ்வப்போது ஏற்பட்ட தேவைக்காக உருவானவை எனவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இவ்வாறு அவர் பேசினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.