UPDATED : செப் 17, 2026 04:14 PM
ADDED : செப் 17, 2026 12:51 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: நீலகிரி கிராம புறங்களில் ரேஷன் கடைகளில் வெங்காயம் வழங்க துவங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் நகர்புற ரேஷன் கடைகளில் மட்டும் மானிய விலையில் வெங்காயம் வழங்கப்பட்டு வந்த நிலையில், 'கிராமபுற ரேஷன் கடைகளிலும் மலிவு விலையில் வெங்காயம் வழங்க வேண்டும்,' என, குன்னுார் பாதுகாப்பு சங்கம் சார்பில் உணவுத்துறை அமைச்சருக்கு மனு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்று, தற்போது கிராமபுற ரேஷன் கடைகளிலும் மானிய விலையில் வெங்காயம் வினியோகம் செய்ய மாவட்ட வட்ட வழங்கல் துறை நடவடிக்கை எடுத்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
