/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பட்டம் இதழை படித்தால் எதிர்காலம் வளமாகும்' : வினாடி - வினா போட்டியில் அசத்திய டியூஷ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள்

ADDED : ஜன 14, 2025 01:41 AM

பந்தலுார்:
'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த, 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி, வினா போட்டியில், பந்தலுார் டியூஷ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் உடனுக்குடன் பதில் அளித்து பரிசுகளை வென்றனர்.
'தினமலர்' மாணவர் பதிப்பு பட்டம் இதழ் சார்பில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் வினாடி, வினா விருது, '2024-25' போட்டி நடத்தப்படுகிறது.
நடப்பாண்டு வினாடி, வினா போட்டி பட்டம் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா வித்தியாலயா பள்ளியில் நடந்தது. அதில், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் கரம் கோர்த்துள்ளது. கோ-ஸ்பான்சராக சத்யா ஏஜன்சி இணைந்துள்ளது.
அதில், பள்ளி அளவில் வினாடி, வினா மாணவர்களுக்கான போட்டியில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, பள்ளி அளவில் இறுதிப் போட்டி நடத்தப்படும். போட்டியின் நிறைவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இதன்படி, பந்தலுார் டியூஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த, வினாடி வினா போட்டியில் தகுதி சுற்றுக்கான பொது அறிவு தேர்வை, 50 பேர் எழுதினார். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி, வினா போட்டி நடத்தப்பட்டது.
தொடர்ந்து, மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில், 10-ம் வகுப்பு மாணவன் சுபிசேரன் முதலிடம்; 11ம் வகுப்பு மாணவன் தரண், 2-ம் இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் சுசீந்திரநாத் தலைமையில், ஆசிரியர்கள் மகேஷ்வரன், விக்னேஷ்வரன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை முதல்வர் மேற்பார்வையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.--