/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடும்ப தோஷம் நீங்க பகவதி அம்மனுக்கு செவ்விளக்கு பூஜை
/
குடும்ப தோஷம் நீங்க பகவதி அம்மனுக்கு செவ்விளக்கு பூஜை
குடும்ப தோஷம் நீங்க பகவதி அம்மனுக்கு செவ்விளக்கு பூஜை
குடும்ப தோஷம் நீங்க பகவதி அம்மனுக்கு செவ்விளக்கு பூஜை
ADDED : ஆக 05, 2025 10:36 PM

கூடலுார்; கூடலுார் புத்துார்வயல் மகாவிஷ்ணு கோவிலில், ஆடி மாதத்தில் குடும்பதோஷம் நீங்க, நடைபெற்ற செவ்விளக்கு பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
கூடலுார் மகாவிஷ்ணு கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு, செவ்வாய் கிழமை தோறும், குடும்ப தோஷம் நீங்க, பகவதி அம்மனுக்கு செவ்விளக்கு பூஜை நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை விஷ்ணு கோவிலில் செவ்விளக்கு பூஜை நடந்தது. பெண் பக்தர்கள், அரிசி, தேங்காய் எடுத்து வந்து அம்மனுக்கு பூஜை செய்தனர்.
பூஜைக்கு பின், அரிசி தேங்காயுடன் கோவில் சார்பில் மஞ்சள், குறுமிளகு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அதில், பக்தர்கள், திரளாக பங்கேற்றனர்.
கோவில் நிர்வாகிகள் கூறுகையில், 'ஆடி மாதத்தில் செவ்வாய் கிழமை தோறும், செவ்விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பூஜை செய்து வருகின்றனர். பூஜையில் பங்கேற்று, பூஜை செய்வதன் மூலம் குடும்ப தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்,' என்றனர்.

