தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நீலகிரியில் கடும் வறட்சியால் பாதிப்பு: தேயிலையில் சிவப்பு சிலந்தி தாக்குதல்

 நீலகிரியில் கடும் வறட்சியால் பாதிப்பு: தேயிலையில் சிவப்பு சிலந்தி தாக்குதல்

 நீலகிரியில் கடும் வறட்சியால் பாதிப்பு: தேயிலையில் சிவப்பு சிலந்தி தாக்குதல்


ADDED : ஏப் 22, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: நீலகிரியில் மாவட்டத்தில், கடும் வெயிலுடன் வறட்சியான காலநிலை நிலவுவதால், தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தா க்குதல் அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், 65,000க்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். கோத்தகிரி, மஞ்சூர், குன்னுார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நடப்பாண்டு முதல் மூன்று மாதம், உறைபனி மற்றும் நீர்பனி பொழிவு அதிகரித்தது.

அதன்பின், மேகமூட்டம் மற்றும் வெயில் போன்று, இரு வேறு காலநிலைகள் தென்பட்டன. இதனால், தேயிலை தோட்டங்களில் உள்ள கொழுந்து கருகியது.

தற்போது, வறண்ட வானிலை மற்றும் வறட்சி காரணமாக, ஊட்டி வேலிவியூ, மஞ்சூர், குந் தா உட்பட, பல்வேறு தேயிலை தோட்டங்களில் சிவப்பு சிலந்தி நோய் தாக்குதலும் ஏற்பட்டது.

இதனால் மகசூல் குறைந்ததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கோடையின் தாக்கத்தால், தற்போது பகல் நேரத்தில், கடும் வெயில் நிலவுவதால், தோட்டங்களில் ஈரப்பதம் வெகுவாக குறைந்து வருகிறது

சிறு தேயிலை விவசாய சங்க நிர்வாகி ராமன் கூறுகையில்,''நீலகிரியில் கோடையில் வெப்ப நிலை அதிகபட்சம், 24 டிகிரி செல்சியசாக இருக்க வேண்டும்.

மாறாக சில நாட்களாக, 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக உள்ளது. இதனால் தேயிலை மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்து வருதுடன், மகசூல் வெகுவாக குறைந்து உள்ளது.

''தொழிற்சாலைகளுக்கு, விவசாயிகள் வழங்கும் தேயிலை வழக்கத்தைவிட குறைந்து உள்ளது. தற்போது வரை மாவட்டத்தில், 20,000 ஏக்கரில் சிவப்பு சிலந்தி தாக்குதல் படர்ந் துள்ளது.

மேலும், மகசூல் குறைந்து உள்ளதால், நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. நோய் பாதித்த பகுதிகளை, அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து, நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார் .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us