/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தால் பூமியை காக்கலாம்: கருத்தரங்கில் தகவல் பள்ளியில் நடந்த கருத்தரங்கில் தகவல்

ADDED : ஜன 30, 2025 09:29 PM
மஞ்சூர்;தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னெடுத்துள்ள,'பசுமை நீலகிரி 2024- 25' என்ற திட்டத்தின் கீழ், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து சிறப்பு கருத்தரங்கு, மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ, சிறப்பு கருத்தாளராக பங்கேற்று பேசியதாவது:
உலகில், 80 சதவீதம் பிளாஸ்டிக் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி துாக்கி எறியும் குப்பையாகி காணப்படுகின்றன. பெரும்பாலான பிளாஸ்டிக் குப்பை கழிவுகள், ஒரு லட்சம் ஆண்டுகள் ஆனாலும் அழியாது.
பூமியின் பரப்பில், 40 சதவீதம் பிளாஸ்டிக் குப்பைகளால் மூடப்பட்டுள்ளன. கடல் பரப்பிலும், பிளாஸ்டிக் குப்பைகள் தீவு போல காட்சியளிக்கிறது. 12 ஆயிரம் வேதிப்பொருட்கள் சேர்த்து, நாம் பயன்படுத்தும பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் தாய்ப்பால், ரத்தத்தில் உள்ள என்ற அதிர்ச்சி தகவல் மருத்துவ உலகில் அதிர்ச்சியை அளிக்கிறது. உற்பத்தி செய்யும் இடத்திலேயே தடை விதித்தால் மட்டுமே, பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியும்.
எனவே, மனித குலத்திற்கு சாபமாக கருதப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தால் மட்டுமே, பூமியை பாதுகாக்க முடியும்.
அதனால், கூடுமானவரை துணி பைகளை பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். மாணவர்களுக்கு, துண்டு பிரசுரம் வினியோகித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், மாணவர்கள், ஆசிரியர்கள் பாபி, சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர் சகாய் நன்றி கூறினார்.