/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் - ஊட்டி பஸ்கள் குறைப்பு
/
குன்னுார் - ஊட்டி பஸ்கள் குறைப்பு
ADDED : ஜன 02, 2024 10:36 PM

குன்னுார்;குன்னுார்- ஊட்டி இடையே பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
நீலகிரியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, 470 க்கும் மேல் அரசு பஸ்கள் இருந்த நிலையில் குறைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
குன்னுார்- ஊட்டி இடையே,10 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்கள், தற்போது ஒரு மணி நேரத்துக்கு இரு முறை மட்டுமே இயக்கப்படுகிறது. சில நேரங்களில் இந்த பஸ்கள் எல்லநள்ளி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. மாலை, 6:30 மணி முதல் 8:00 மணி வரை, குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு சாதாரண கட்டண அரசு பஸ் இயக்கப்படாததால், பணி முடித்து வரும் மக்கள் மற்றும் ரயிலில் வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு செல்ல பஸ் கிடைக்காமல் நீண்ட நேரம் காத்து நிற்கின்றனர்.
இந்நிலையில், ஜெகதளா ஹெத்தை அம்மன் திருவிழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இவர்கள் திரும்பி செல்ல பஸ்கள் கிடைக்காமல், நீண்ட நேரம் காத்திருந்து கூட்ட நெரிசலில் பயணம் மேற்கொண்டனர்.
ஊட்டி- குன்னுார் இடையே கூடுதல் பஸ்களை இயக்க வலியுறுத்தி பலமுறை புகார்கள் தெரிவித்த போதும் ஓரிரு நாட்கள் மட்டுமே பெயரளவிற்கு இயக்கி மீண்டும் பஸ்கள் நிறுத்தப்படுகிறது.
இதே போல, ஊட்டி - மீக்கேரி - குன்னூர் இடையே இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மீக்கேரி உட்பட சுற்றுப்புற கிராம மக்கள், பள்ளி குழந்தைகள் பல கி.மீ., துாரம் நடந்து வந்து மற்ற பஸ்களில் ஏறி ஊட்டிக்கு சென்று வருகின்றனர். எனவே, அரசு பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்து, உள்ளூர் போக்குவரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.