/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குக்கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் 'சீட் கெபாசிட்டி' குறைப்பு! கண்டக்டர் - பயணியர் இடையே நாள் தோறும் தகராறு
/
குக்கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் 'சீட் கெபாசிட்டி' குறைப்பு! கண்டக்டர் - பயணியர் இடையே நாள் தோறும் தகராறு
குக்கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் 'சீட் கெபாசிட்டி' குறைப்பு! கண்டக்டர் - பயணியர் இடையே நாள் தோறும் தகராறு
குக்கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் 'சீட் கெபாசிட்டி' குறைப்பு! கண்டக்டர் - பயணியர் இடையே நாள் தோறும் தகராறு
ADDED : செப் 26, 2024 11:21 PM

ஊட்டி : நீலகிரியில் குக்கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் 'சீட் கெபாசிட்டி' படிப்படியாக குறைக்கப்பட்டதால் பயணியர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு போக்குவரத்து கழக மண்டலத்தில், 'ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் மற்றும் மேட்டுப்பாளையத்தில் ஒரு கிளை,' என, 270 வழித்தடத்தில், 320 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தினசரி, 1.30 லட்சம் பயணியர் அரசு பஸ்களை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, நீலகிரியில் ஆறு தாலுக்காவுக்கு உட்பட்ட பகுதியில், 400க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு நுாற்றுக்கு மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த பல ஆண்டுகளாக, நீலகிரியில் உள்ள குக்கிராமங்களுக்கு, '44 பிளஸ்-1 சீட்' கெபாசிட்டி கொண்ட பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாகத்திற்கு பின், '54 பிளஸ்-1 சீட்' கெபாசிட்டி பஸ்கள் சாலையின் நிலையை கருத்தில் கொண்டு இயக்கப்பட்டது. அதன்படி, 30 சதவீதம் பஸ்கள் குக்கிராமங்களுக்கு தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
பயணியர் அதிருப்தி
சமீபத்தில் அரசு சார்பில் புதிய பஸ்கள் இயக்கப்பட்டது. அதில், குக்கிராமங்களுக்கு, பி-6 மாடல் கொண்ட, 40 பிளஸ்-1 'சீட் கெபாசிட்டி' பஸ்கள் இயக்கப்பட்டன. அதிலும், 44 பிளஸ்-1 சீட் கெபாசிட்டி கொண்ட சில பஸ்களை 'பாடிரீபில்ட்' செய்தனர். அந்த பஸ்களை, 36 பிளஸ் 1 சீட் கெபாசிட்டியில் வடிவமைத்துள்ளனர்.
சில குக்கிராமங்களுக்கு, 54 பிளஸ் 1 சீட் கெபாசிட்டி கொண்ட பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், குக்கிராமங்களுக்கு இயக்கப்படும் புதிய பஸ்களில் படிப்படியாக சீட்கெபாசிட்டி குறைக்கப்பட்டிருப்பது பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பஸ்சில் அடிக்கடி தகராறு
மேலும் போதிய கலெக்ஷன் இல்லாத குக்கிராமங்களுக்கு அரசு பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டது. சில கிராமங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் கிடைப்பதில்லை. கிடைக்கும் பஸ்சில் பயணியர் அமர்ந்து செல்ல போதிய இருக்கை வசதி இல்லை. நின்று பயணிப்பதற்கும் போதிய இட வசதியும் இல்லை. இனால், நாள் தோறும் கண்டக்டர் மற்றும் பயணியருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி விட்டது.
ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறுகையில், ''அரசு போக்குவரத்து கழக நிர்வாகம், 44 பிளஸ் 1 சீட் கெபாசிட்டி கொண்ட சில பஸ்களை பாடிரீபில்ட் செய்துள்ளனர். அந்த பஸ்களில் சீட் கெபாசிட்டி குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பயணிருக்கு வசதியின்றி இயங்கும் பஸ்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு மோட்டார் வாகன சட்ட விதிகளின் கீழ், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.