ADDED : நவ 14, 2024 05:28 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே பொன்னானி ஆற்றில் தண்ணீர் வழிந்து ஓட ஏதுவாக சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
பந்தலுார் அருகே கூவமூலா பகுதியில் உற்பத்தியாகி, கேரளா வழியாக கர்நாடகா மாநிலம் கபினி அணைக்கு செல்லும் முக்கிய கிளை ஆறாக பொன்னானி ஆறு உள்ளது. இந்த ஆற்றில் பொன்னானி பாலம் அருகே மழையின் போது, அடித்து வரப்பட்ட மண் மற்றும் மரங்கள் உள்ளிட்ட புதர்கள் நிறைந்து காணப்பட்டது.
இதனால், தண்ணீர் வழிந்து ஓட வழியில்லாமல் தேங்கி நின்று, பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. தொடர்ந்து, பந்தலுார் வருவாய்த்துறை சார்பில், மண் மேடு முழுவதும் அகற்றப்பட்டதுடன் மரம் மற்றும் புதர் செடிகள் அகற்றப்பட்டன.
இதனால், தண்ணீர் வழிந்தோடும் நிலை ஏற்பட்டுள்ளது. பணிகளை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.