/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுமியை கர்ப்பமாக்கிய உறவினருக்கு 20 ஆண்டு சிறை
/
சிறுமியை கர்ப்பமாக்கிய உறவினருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : ஜூன் 27, 2025 09:07 PM
ஊட்டி; கூடலுார் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய உறவினருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊட்டி மகிளா கோர்ட் தீர்ப்பளித்தது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே கிராமத்தை சேர்ந்த, 55 வயதான பழங்குடியினத்தை சேர்ந்த நபர் தனது உறவினரான, 16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
சிறுமிக்கு உடல்நலம் குறைவு ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்த டாக்டர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். பெற்றோர், கூடலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துகடந்த, 2020 ஆக., 25ம் தேதி அந்த நபரை கைது செய்தனர். வழக்கு விசாரணை, ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சிறுமியின் உறவினருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மகிளா கோர்ட் நீதிபதி எம். செந்தில்குமார் உத்தரவிட்டார். வழக்கில், அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார்ஆஜரானார்.