/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூந்தோட்டத்தில் மீட்கப்பட்ட ராஜநாகம் வனத்தில் விடுவிப்பு
/
பூந்தோட்டத்தில் மீட்கப்பட்ட ராஜநாகம் வனத்தில் விடுவிப்பு
பூந்தோட்டத்தில் மீட்கப்பட்ட ராஜநாகம் வனத்தில் விடுவிப்பு
பூந்தோட்டத்தில் மீட்கப்பட்ட ராஜநாகம் வனத்தில் விடுவிப்பு
ADDED : அக் 07, 2024 12:28 AM

கூடலுார் : கூடலுார் அருகே தனியார் எஸ்டேட் பூந்தோட்டத்தில் பதுங்கியிருந்த, 10 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வன ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் மீட்டு அடர்ந்த வனத்தில் விடுவித்தனர்.
கூடலுார் - கோழிக்கோடு சாலை, நந்தட்டி அருகே உள்ள, தனியார் தேயிலை தோட்ட உரிமையாளரின் வீடு உள்ளது. அங்குள்ள பூந்தோட்டத்தில் நாகப்பாம்பு இருப்பதாக நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.
கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ), வனகாவலர் பக்கீஸ் ராஜ், வேட்டை தடுப்பு காவலர் கோவிந்தராஜ், தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு சென்று அதனை மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.