/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி மணிக்கூண்டு அருகில் துாய்மை பணி நடந்ததால் நிம்மதி
/
ஊட்டி மணிக்கூண்டு அருகில் துாய்மை பணி நடந்ததால் நிம்மதி
ஊட்டி மணிக்கூண்டு அருகில் துாய்மை பணி நடந்ததால் நிம்மதி
ஊட்டி மணிக்கூண்டு அருகில் துாய்மை பணி நடந்ததால் நிம்மதி
ADDED : ஆக 25, 2025 09:05 PM
ஊட்டி; ஊட்டி மணிக்கூண்டு பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, துாய்மை பணி நடந்தது.
ஊட்டி மணிக்கூண்டு வழியாக மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான பொதுமக்கள், சுற்றுலா பயணியரும் வந்து செல்கின்றனர். அப்பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டது.
கால்வாயில் இருந்து வெளியேறிய கழிவுநீர் கடந்த மூன்று நாட்களாக அப்பகுதியில் தேங்கியதால், கடும் துர்நாற்றம் வீசி யது. அவ்வழியாக நடந்து செல்ல முடியாமல் மக்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வந்தனர். இந்நிலையில், நேற்று காலை நகராட்சி சார்பில் அப்பகுதி யில் துாய்மை பணி நடந்தது.
மக்கள் கூறுகையில், 'நகரின் மையப்பகுதியில் அடிக்கடி கழிவு நீர் தேங்காத வகையில் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.