/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போரில் உயிர் நீத்தவர்களின் தைரியத்தை நினைவு கூருங்கள்; எம்.ஆர். சி., கமாண்டன்ட் பேச்சு
/
போரில் உயிர் நீத்தவர்களின் தைரியத்தை நினைவு கூருங்கள்; எம்.ஆர். சி., கமாண்டன்ட் பேச்சு
போரில் உயிர் நீத்தவர்களின் தைரியத்தை நினைவு கூருங்கள்; எம்.ஆர். சி., கமாண்டன்ட் பேச்சு
போரில் உயிர் நீத்தவர்களின் தைரியத்தை நினைவு கூருங்கள்; எம்.ஆர். சி., கமாண்டன்ட் பேச்சு
ADDED : பிப் 03, 2025 07:00 AM

குன்னுார் : குன்னுார் வெலிங்டன் பேரக்சில், 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த, புனித ஜார்ஜ் காரிசன் தேவாலயம் உள்ளது.
இங்கு, ஆண்டு தோறும், ஜன., 30ல் தேசிய தியாகிகள் தினத்திற்கு பிறகுவரும் ஞாயிறன்று, போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்காக, மலரஞ்சலி செலுத்தப்படுகிறது.
இதனையொட்டி, இங்கு நேற்று நடந்த தியாகிகள் தின நிகழ்ச்சியில், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் (எம்.ஆர்.சி.,) பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ், மலர் வளையம் வைத்து பேசியதாவது:
நம் ராணுவத்தின் உயர்ந்த மரபுகளின் அடிப்படையில், நமது தேசத்தை பாதுகாப்பதற்காக தங்கள் உயிரை கொடுத்தவர்களின் நினைவுகளை நாம் மதிக்கிறோம்; தியாகிகளை நினைவு கூரும் வேளையில், அவர்கள் போராடிய மதிப்புகளுக்கான நமது உறுதிப்பாட்டை, மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டும். அவர்களின் முடிக்கப்படாத பணியை தொடரவும், தியாகிகளின் தியாகங்களை பற்றி சிந்திக்கவும் வேண்டும்; போரில் உயிர் நீத்தவர்களின், தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் உத்வேகத்தை நினைவு கூர்ந்து, நமது நாட்டிற்கும், எதிர்கால தலைமுறைகளுக்கும், பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க, ஒன்றிணைந்து செயல்படுவோம்.
தன்னலமற்ற தன்மை மற்றும் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது; உண்மையான தேசபக்தி என்பது வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல, செயல்கள் என்பதை, அவர்கள் நிரூபித்துள்ளனர்.
ராணுவத்தினர் கடமைகளை செய்யும்போது, தங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்த குடும்பங்களையும் நினைவு கூர கடமை பட்டுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, பாதிரியார் விஜேஷ் தலைமையில் ஆராதனை, வழிபாடு நடந்தது. எம்.ஆர்.சி., பேண்ட் இசை குழுவினரின் தேச பக்தி பாடல்கள் இடம் பெற்றது. ஏற்பாடுகளை தேவாலய செயலாளர் பிராங்க், பொருளாளர் தர்மராஜ் உட்பட நிர்வாகிகள், ராணுவத்தினர் செய்தனர்.

