/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலைப்பாதையில் 265 கிலோ 'பிளாஸ்டிக்' அகற்றம்; துாய்மை பணியில் ஈடுபட்ட கல்லுாரி மாணவர்கள்

ADDED : அக் 07, 2024 12:14 AM

குன்னுார் : குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைபாதையில் துாய்மை பணியில், 265 கிலோ 'பிளாஸ்டிக்' குப்பைகள் அகற்றப்பட்டது.
குன்னுார் -- மேட்டுப்பாளையம் மலைபாதையில், 'பிளாஸ்டிக்' பாட்டில்கள், துரித உணவு பிளாஸ்டிக் பைகளை சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே கொட்டி செல்கின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசின் 'ஸ்வச்தா ஹி சேவா' தலைப்பில்,கேத்தி சி.எஸ்.ஐ., பொறியியல் கல்லுாரி சார்பில் மலை பாதையில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில், நந்தகோபால் பாலம் முதல் பர்லியார் வரை பகுதிகளில், 265 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பிரதாப் தலைமையில், 50 நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவியர் பணியில் ஈடுபட்டனர். இவை, குன்னுார் ஓட்டுபட்டறை குப்பை மேலாண்மை மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக, 'துாய்மையே சேவை' உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர். கேத்தி கம்மந்து, கெரையாடா, சோரகுண்டு, அச்சனக்கல் கிராமங்களில் துாய்மை பணி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.