/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரி கோவில்மேடு சாலையில் அபாய மரங்கள் அகற்றம்
/
கோத்தகிரி கோவில்மேடு சாலையில் அபாய மரங்கள் அகற்றம்
கோத்தகிரி கோவில்மேடு சாலையில் அபாய மரங்கள் அகற்றம்
கோத்தகிரி கோவில்மேடு சாலையில் அபாய மரங்கள் அகற்றம்
ADDED : நவ 12, 2024 09:53 PM

கோத்தகிரி ; கோத்தகிரி கோவில் மேடு சாலையில் அபாய மரங்கள் அகற்றப்பட்டு வருவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கோத்தகிரி பேரூராட்சியின் கீழ் பகுதியில், கோவில்மேடு சாலை அமைந்துள்ளது. சாலை வழியாக, தர்மோனா, கோட்டஹால் பகுதிக்கு, நுாற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் சென்று வருகின்றனர்.
தவிர, மாதாகோவில் செல்லும் மக்கள் மற்றும் டவுன் ஸ்கூல் செல்லும் மாணவர்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். சாலையை ஒட்டி, வானுயர்ந்த அபாயகரமான கற்பூர மரங்கள் உள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மரங்கள் விழுந்த சம்பவம் நடந்துள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 'குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில் உள்ள அபாய மரங்களை அகற்ற வேண்டும்,' என, மக்கள் கடந்த, பத்து ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், குன்னுார் ஆர்.டி.ஓ., குறிப்பிட்ட பகுதியை ஆய்வு செய்து, மக்கள் நலன் கருதி, எட்டு அபாய மரங்களை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தியதுடன், பாதுகாப்புடன் மரங்களை அகற்ற அனுமதியும் வழங்கினார்.
அதன்படி, இரு நாட்களாக, 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உதவியுடன் மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
நீண்ட நாள் கோரிக்கைக்கு விடை கிடைத்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.