/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோர புதர் செடி வெட்டி அகற்றம்
/
சாலையோர புதர் செடி வெட்டி அகற்றம்
ADDED : நவ 12, 2024 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்; பந்தலுார் அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் புதர் செடிகள் வெட்டி அகற்றப்பட்டது.
பந்தலுார் பஜாரிலிருந்து நெல்லியாளம் நகராட்சி அலுவலகம் மற்றும் நீதிமன்றம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. சாலையின் இரண்டு பக்கமும் புதர்கள் வளர்ந்து, பொதுமக்கள் நடந்து செல்லவும் அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் சொல்லவும் சிரமம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, எஸ்.ஒய்.எஸ்., ஆறுதல் அமைப்பு நிர்வாகி உம்மர் தலைமையிலான குழுவினர் மற்றும் பந்தலுார் வளர்ச்சி குழுவினர் இணைந்து, செடிகளை வெட்டி அகற்றினர். இதில், யூனஸ், தாஜுதீன், முருகன், வியாபாரிகள் சங்க தலைவர் அஷ்ரப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.