/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோர புதர் செடிகளை அகற்றி கால்வாய் துார் வாரும் பணி
/
சாலையோர புதர் செடிகளை அகற்றி கால்வாய் துார் வாரும் பணி
சாலையோர புதர் செடிகளை அகற்றி கால்வாய் துார் வாரும் பணி
சாலையோர புதர் செடிகளை அகற்றி கால்வாய் துார் வாரும் பணி
ADDED : நவ 12, 2024 09:57 PM

கோத்தகிரி ; கோத்தகிரி கட்டபெட்டு இடையே, சாலையோர புதர் செடிகளை அகற்றி, மழைநீர் கால்வாய் துார் வாரும் பணி நடந்து வருகிறது.
கோத்தகிரியில் இருந்து, குன்னுார் மற்றும் ஊட்டி சாலை மிக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டுள்ளது. சாலையோரத்தில் புதர் செடிகள் ஆக்கிரமித்துள்ளன. மழைநீர் கால்வாய்கள் அடைப்பட்டுள்ளன.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புதர் செடிகள் அதிக வளர்ந்துள்ளதுடன், மழைநீர் சாலையின் மேல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குறிப்பாக, பார்த்தீனியம் செடிகள் சாலையின் இருப்புறங்களிலும் ஆக்கிரமித்துள்ளன. இந்த செடிகளால், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால், மழை தீவிரமடைவதற்கு முன்பு, நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை பணியாளர்கள் மூலம், செடிகள் அகற்றி, கால்வாய் துார் வாரப்படும் பணி நடந்து வருகிறது.