/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலையில் 'இன்டர்லாக்' கற்கள் பயன்படுத்தி சீரமைப்பு
/
சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலையில் 'இன்டர்லாக்' கற்கள் பயன்படுத்தி சீரமைப்பு
சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலையில் 'இன்டர்லாக்' கற்கள் பயன்படுத்தி சீரமைப்பு
சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலையில் 'இன்டர்லாக்' கற்கள் பயன்படுத்தி சீரமைப்பு
ADDED : ஆக 04, 2025 07:54 PM

கூடலுார்; கூடலுார் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், சேதமடைந்த பகுதிகள் மட்டும், 'இன்டர்லாக்' கற்கள், பயன்படுத்தி சீரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு, கர்நாடகா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் கூடலுார் - மைசூரு - -ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக அதிகளவில் வந்து செல்கின்றனர். ஊசிமலை -தொரப்பள்ளி -இடையே உள்ள, 16 கி.மீ., துாரமுள்ள சாலை பல இடங்களில் சேதமடைந்து, குண்டும், குழியுமாக மாறி உள்ளது. சாலையில் வாகனம் இயக்க ஓட்டுனர்கள் சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சாலையில் சேதமடைந்த பகுதிகளில், அவ்வப்போது பாறைபொடி கலந்த ஜல்லி கற்கள் நிரப்பி, பலமுறை தற்காலிகமாக சீரமைத்தனர். அவை சில வாரத்தில் மீண்டும் சேதமடைவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், நடுவட்டம் டி.ஆர்., பஜார் பகுதியில், சாலை சீரமைப்பு பணியின் போது, அகற்றப்பட்ட இன்டர்லாக் கற்களை எடுத்து வந்து, சேதமடைந்த பகுதியை சீரமைக்கும் பணியை துவங்கி உள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'கூடலுார் - மைசூரு சாலை மார்த்தோமா நகர், முனீஸ்வரன் கோவில், புதிய பஸ் ஸ்டாண்ட், தனியார் பெட்ரோல் பங்க் அருகே உள்ள சாலையில் சீரமைக்கும் பணி துவங்கி உள்ளோம்,'என்றனர்.
ஓட்டுனர்கள் கூறுகையில், 'ஊசிமலை -- தொரப்பள்ளி இடையே சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை முழுமையாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.