/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொரப்பள்ளியில் சேதமடைந்த அகழி சீரமைப்பு; யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை
/
தொரப்பள்ளியில் சேதமடைந்த அகழி சீரமைப்பு; யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை
தொரப்பள்ளியில் சேதமடைந்த அகழி சீரமைப்பு; யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை
தொரப்பள்ளியில் சேதமடைந்த அகழி சீரமைப்பு; யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை
ADDED : நவ 21, 2024 09:11 PM

கூடலுார் ; முதுமலையிலிருந்து காட்டு யானைகள், கூடலுார் தொரப்பள்ளி பகுதிக்குள் நுழைவதை தடுக்க, சேதமடைந்த அகழியை சீரமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கூடலுார், தொரப்பள்ளி, குணில், அள்ளூர்வயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு, முதுமலை புலிகள் காப்பக வனத்திலிருந்து காட்டு யானைகள் நுழைவதை தடுக்க, முதுமலை வன எல்லையை ஒட்டி அகழி அமைக்கப்பட்டுள்ளது.
அவை தொடர்ச்சியாக பராமரிக்க படாமல் உள்ளதால், பல இடங்களில் சேதமடைந்துள்ளது.
இரவில், அதன் வழியாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. வனத்துறையினர், அவ்வப்போது கண்காணித்து விரட்டினாலும், காட்டு யானைகள் குடியிருப்புக்குள் நுழைவதை நிரந்தரமாக தடுக்க முடியவில்லை. தற்போது, இப்பகுதியில், பயிரிட்டுள்ள நெல் அறுவடைக்கு தயாராகி வரும் நிலையில், யானைகள் வயல்களில் நுழைந்து நெற் பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில், இப்பகுதியில் சேதமடைந்துள்ள அகழியை பொக்லைன் உதவியுடன் சீரமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'சேதமடைந்த அகழியை சீரமைப்பதால், பயிர்கள் காக்கப்படும். அதேபோன்று, காட்டு யானைகள் மீண்டும் அகழியை சேதப்படுத்தி இப்பகுதிக்குள் நுழைவதை தடுக்க, கண்காணிப்பு பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். யானைகள் அகழியை சேதப்படுத்தக்கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு, சோலார் மின்வேலி அமைக்க வேண்டும்,' என்றனர்.