/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை பாதையில் சீரமைப்பு பணிகள் துரிதம்
/
மலை பாதையில் சீரமைப்பு பணிகள் துரிதம்
ADDED : மார் 26, 2025 08:54 PM

குன்னுார்; குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், சீரமைப்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.
ஊட்டியில் அரசு மருத்துவ கல்லுாரியை ஏப்., 6ல்,மாநில முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பதுடன், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
இதனையொட்டி வரும் ஏப்., 5ல், முதல்வர் வருகை தருவதால், நெடுஞ்சாலை சீரமைப்பு உட்பட பல்வேறு பணிகளும் துரித கதியில், நடந்து வருகிறது.
குறிப்பாக, குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் உள்ள முட்புதர்கள் அகற்றுதல், சுண்ணாம்பு அடித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக காரமடையில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழிலாளர்கள், காட்டேரியிலிருந்து சுண்ணாம்பு அடிக்கும் பணியை துவக்கி உள்ளனர். மேட்டுப்பாளையம் வரை இந்த குழுவினர் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
இதேபோல, சாலையோரங்களில் உள்ள கால்வாய்களில், மண் மற்றும் குப்பைகள் பொக்லைன் பயன்படுத்தி அகற்றப்பட்டு வருகின்றன.
டிரைவர்கள் கூறுகையில்,' மலை பாதையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதை போன்று, சாலை பணிகளை தரமான முறையில் நிறைவு செய்ய வேண்டும்,' என்றனர்.