/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி, குன்னுாரில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்; பள்ளியில் பெற்றோர் குவிந்ததால் விடுமுறை

ADDED : அக் 15, 2024 05:31 AM

குன்னுார் : குன்னுார் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளிக்கு, இ-மெயிலில், இரண்டாவது முறையாக, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் பெட்போர்டு அருகே ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளியில், 1,367 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளிக்கு, 8ம் தேதி, இ--மெயிலில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை, 10:00 மணிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் வந்துள்ளது.
உடனடியாக விடுமுறை அறிவித்து, பெற்றோருக்கு தகவல் கொடுத்து, மாணவ, மாணவியர் வெளியே அனுப்பப்பட்டனர். வெடி குண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். இம்முறையும் எதுவும் கிடைக்கவில்லை.
பெற்றோர் கூறுகையில், 'வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து விடுக்கப்படுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. சைபர் கிரைம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.