/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் மின் கம்பம் மாற்றினால் பாதிப்பில்லை
/
சாலையில் மின் கம்பம் மாற்றினால் பாதிப்பில்லை
ADDED : ஜூலை 11, 2025 11:05 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே சோலாடி கிராமத்திற்கு செல்லும் சாலையில், விழும் நிலையில் அமைந்துள்ள மின் கம்பத்தை அகற்ற வலியுறுத்தபட்டு உள்ளது.
பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சோலாடி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.
அரசு பழங்குடியினர் பள்ளி எதிரே உள்ள குடியிருப்புகளுக்கு, தாழ்வான பகுதியில் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையின் ஓரத்தில் சாய்ந்த நிலையில், ஆபத்தான வகையில் மின்கம்பம் ஒன்று உள்ளது.
வாகனங்கள் செல்லும் போது மின் கம்பம் மீது மோதி, பாதிப்பு ஏற்பட்டால் குடியிருப்புகள் மற்றும் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதனால், மின்கம்பத்தை மாற்றி அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், அதிகாரிகள் மவுனம் காத்து வருகின்றனர். எனவே, மின் வாரிய அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து, கம்பத்தை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.