/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கல்லீரல் பாதிப்பால் வளர்ப்பு யானை சந்தோஷ் உயிரிழந்ததாக தகவல்
/
கல்லீரல் பாதிப்பால் வளர்ப்பு யானை சந்தோஷ் உயிரிழந்ததாக தகவல்
கல்லீரல் பாதிப்பால் வளர்ப்பு யானை சந்தோஷ் உயிரிழந்ததாக தகவல்
கல்லீரல் பாதிப்பால் வளர்ப்பு யானை சந்தோஷ் உயிரிழந்ததாக தகவல்
ADDED : செப் 11, 2025 09:10 PM
கூடலுார்; 'முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானை சந்தோஷ், கல்லீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தது,' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானை முகாமில் பராமரித்து வந்த, வளர்ப்பு யானை,55, சந்தோஷுக்கு, 9ம் தேதி உடல் நலக் குறைவு ஏற்பட்டது. கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம், அதிகாலை உயிரிழந்தது.
இறந்த யானையின் உடலுக்கு பாகன்கள், வனத்துறையினர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் அதன் உடல், முகாம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. வனத்துறையினர் கூறுகையில், 'உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வளர்ப்பு யானை சந்தோஷின் கல்லீரல் பெரிதும் பாதிப்படைந்து, அதன் காரணமாக உயிரிழந்ததாக முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்தது. மற்ற விபரங்கள் அதன் அறிக்கை கிடைத்த பின் தெரிய வரும்,' என்றனர்.