ADDED : ஜன 21, 2025 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; ஊட்டி அரசு கலைக் கல்லுாரி மைதானத்தில் வரும், 26ம் தேதி குடியரசு தின விழா நடக்கிறது. விழாவின் போது, கலெக்டர் தேசிய கொடி ஏற்றி வைத்து போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.
தொடர்ந்து, காவல்துறையில் சிறந்த முறையில் பணியாற்றிய காவலர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், குடியரசு தின விழா குறித்து, கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், 'குடியரசு தின விழா நிகழ்ச்சியின் போது, அனைத்து அரசு துறை அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், ஏ.டி.எஸ்.பி., சவுந்தரராஜன், தனி துணை கலெக்டர் கல்பனா, ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.