/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பிளாஸ்டிக்' ஒழிக்க ஒத்துழைப்பு அவசியம் கிராம சபை கூட்டத்தில் வேண்டுகோள்
/
'பிளாஸ்டிக்' ஒழிக்க ஒத்துழைப்பு அவசியம் கிராம சபை கூட்டத்தில் வேண்டுகோள்
'பிளாஸ்டிக்' ஒழிக்க ஒத்துழைப்பு அவசியம் கிராம சபை கூட்டத்தில் வேண்டுகோள்
'பிளாஸ்டிக்' ஒழிக்க ஒத்துழைப்பு அவசியம் கிராம சபை கூட்டத்தில் வேண்டுகோள்
ADDED : ஜன 28, 2025 10:09 PM
ஊட்டி , ; 'நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக அமைய நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டது.
ஊட்டி ஊராட்சி ஒன்றியம் துானேரி ஊராட்சிக்கு உட்பட்ட அணிக்கொரை கிராம சமுதாய கூடத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் செயல்படும் கிராம குடிநீர் உட்கட்டமைப்பு பணிகள் , துாய்மை பாரத இயக்கம், அடிப்படை தேவைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.
பின் , கலெக்டர் லட்சுமி பவ்யா பேசியதாவது:
மாநில அரசு பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்று சேரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துானேரி ஊராட்சியை பொறுத்த வரை, 2021ம் ஆண்டு முதல் இதுவரை, 1.63 கோடி ரூபாய் மதிப்பில், 49 வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது.
இப்பகுதி மக்களிடம் சாலை வசதி, விளையாட்டு மைதானம் குறித்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நீலகிரி பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக அமைய நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார். தொடர்ந்து , 'மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவி குழுவிற்கு தொழில் தொடங்க சமுதாய முதலீட்டு நிதியின் கீழ் , 15 லட்சம் ரூபாய், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ், 4 பேருக்கு , 1000 ரூபாய் மதிப்பில் மருந்து பெட்டகங்கள்,' என, மொத்தம், 7 பயனாளிகளுக்கு , 15 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கலெக்டர் தலைமையில் தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழியை அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஏற்று கொண்டனர். கூடுதல் கலெக்டர் கவுசிக், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி உட்பட பலர் பங்கேற்றனர்.