/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் சிம்ஸ்பூங்காவில் ஆய்வு அவசியம்
/
குன்னுார் சிம்ஸ்பூங்காவில் ஆய்வு அவசியம்
ADDED : ஏப் 28, 2025 11:47 PM
குன்னுார், ;குன்னுார் சிம்ஸ் பூங்காவில் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் உள்ள இடத்தில், பாதுகாப்பு வசதிகள் முறையாக செய்து கொடுக்காததால், சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
குன்னுார் சிம்ஸ் பூங்காவில் படகு இல்லம் அருகே உள்ள சிறுவர் விளையாட்டு மையத்தில், சறுக்கல்.
ஊஞ்சல் உட்பட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. இங்கு சறுக்கலில் கீழே விழும் இடத்தில் உள்ள, பாதுகாப்பு மெத்தை கிழிந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
சிறுவர்கள், குழந்தைகள் தரையில் விழுந்து காயம் ஏற்படும் அபாயம் உள்ளது.
சமீபத்தில் பல மடங்கு கட்டண உயர்வை செய்த அரசு, அதற்கேற்ப பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தி தராமல் உள்ளதால் சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

