/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட வளர்ச்சி பணிகள் ஆய்வு
/
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட வளர்ச்சி பணிகள் ஆய்வு
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட வளர்ச்சி பணிகள் ஆய்வு
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட வளர்ச்சி பணிகள் ஆய்வு
ADDED : ஏப் 22, 2025 11:11 PM
ஊட்டி,; ஊட்டி வட்டத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகளை, கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார்.
ஊட்டி காந்தள் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொற்று நோய் பிரிவு ஆய்வகங்களை நேரில் பார்வையிட்டு, அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருந்து, மாத்திரை இருப்பு குறித்து கேட்டறிந்தார். அங்குள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்த அவர், உணவு பொருட்களின் இருப்பை உறுதி செய்தார்.
மழை காலங்களில் அபாயகரமான பகுதியான காந்தள் குருசடி காலனி, மத்திய பஸ் நிலையம் எதிரில், 2.17 கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, ஊட்டி முள்ளிக்கொரை அன்பு அறிவு அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லத்தை பார்வையிட்ட அவர், தனியார் தொண்டு நிறுவனத்தில் பங்களிப்புடன், 7 லட்சம் போய் மதிப்பீட்டில் கட்டுப்பட்ட கழிப்பிடம் மற்றும் குளியலறையை திறந்து வைத்தார்.
மேலும், அங்கு தங்கியுள்ள முதியோர்களில், 5 பேருக்கு, தலா, 1000 ரூபாய் மதிப்பில் மளிகை பொருட்களையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஒரு மாற்று திறனாளிக்கு கண் கண்ணாடி வழங்கினார்.
தொடர்ந்து, தாலுகா அலுவலகத்தில் உங்கள் ஊரில் உங்கள் திட்டத்தில், அரசு துறை அலுவலர்களுடான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று, கோரிக்கை மனுக்களை பெற்றார்,
மேலும் மாவட்ட வழங்கல் துறை சார்பில், 5 பயனாளிகளுக்கு, புதிய ரேஷன் கார்டுகளை வழங்கினார். அதில், கூடுதல் கலெக்டர் கவுசிக், மாவட்ட பழங்கள் அலுவலர் நாராயணன் மற்றும் ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

