/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் சிறுத்தை உலா குடியிருப்புவாசிகள் பீதி
/
ஊட்டியில் சிறுத்தை உலா குடியிருப்புவாசிகள் பீதி
ADDED : அக் 19, 2024 03:00 AM
ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே மஞ்சனக்கொரையில் தேயிலை தோட்டங்கள், வனப்பகுதிகள் அதிகமாக உள்ளதால், சிறுத்தை, காட்டெருமை போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. மஞ்சனக்கொரை, கலைஞர் காலனியில் நேற்று முன்தினம் இரவு உலா வந்த சிறுத்தை, வீட்டின் தடுப்பு சுவர் மீது ஏறி அமர்ந்தது. சரியான தருணத்தில் பாய்ந்து சென்று அங்கு உறங்கி கொண்டிருந்த நாயின் கழுத்தை கவ்வி துாக்கியது.
அப்போது, அவ்வழியாக வாகனம் வந்ததால் சப்தம் கேட்டு நாயை விட்டு சென்றது. காயமடைந்த நாய் வலி தாங்காமல் மெதுவாக எழுந்து தள்ளாடி வீட்டிற்குள் நடந்து சென்றது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். அங்கு வனத்துறையினர் விசாரணை நடத்தினர். மக்கள் கூறுகையில், 'இரவில் சிறுத்தை வீட்டுக்குள் வருவதால், அதை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்' என்றனர்.

