/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் கேத்தியை இணைக்க எதிர்ப்பு; அமைதி ஊர்வலம் நடத்திய கிராம மக்கள்

ADDED : அக் 29, 2024 08:53 PM

குன்னுார் : 'ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக உயர்த்தும் திட்டத்தில் கேத்தி பேரூராட்சியை இணைக்க கூடாது,' என, வலியுறுத்தி கிராம மக்கள் அமைதி ஊர்வலம் நடத்தினர்.
கேத்தி உட்பட நான்கு உள்ளாட்சிகளை இணைத்து, ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக உயர்த்த அரசு திட்டமிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம சபைகளிலும் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பிய பிறகும், பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளை இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு கிராமங்களிலும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.
இந்நிலையில்,கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள், 200க்கும் மேற்பட்டோர் அமைதி ஊர்வலம் நடத்தி, மாநகராட்சியாக ஊட்டியை உயர்த்தும் திட்டத்தில் கேத்தியை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
'கேத்தி பேரூராட்சியை, ஊட்டி மாநகராட்சியோடு இணைத்தால் வரி உயர்வு அதிகரிப்பதுடன், விவசாயம் அழிந்து, கிராமங்கள் இல்லாத சூழல் ஏற்படும்,' என தெரிவித்து, இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது.
உல்லாடா ஹெத்தை அம்மன் கோவிலில் இருந்து எல்லநள்ளி வரை ஊர்வலம் நடத்தி, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தங்களது கோரிக்கையை வெளிப்படுத்தினர்.