/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ. 200 குறையாமல் தேயிலை துாள் ஏலம்: சங்க கூட்டத்தில் தீர்மானம்
/
ரூ. 200 குறையாமல் தேயிலை துாள் ஏலம்: சங்க கூட்டத்தில் தீர்மானம்
ரூ. 200 குறையாமல் தேயிலை துாள் ஏலம்: சங்க கூட்டத்தில் தீர்மானம்
ரூ. 200 குறையாமல் தேயிலை துாள் ஏலம்: சங்க கூட்டத்தில் தீர்மானம்
ADDED : அக் 26, 2025 11:16 PM

ஊட்டி: மத்திய அரசு குறைந்தபட்ச தேயிலைத் தூள் ஏலத் தொகை, 200 ரூபாய்க்கு குறையாமல் விற்பனை செய்திட உரிய சட்டத்தினை இயற்றிட வேண்டும். என, சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஊட்டியில் ஆரி கவுடர் விவசாய சங்கத்தின் மாதாந்திர நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
ஆரிகவுடர் விவசாயிகள் சங்கத் தலைவர் மஞ்சை மோகன் தலைமை வகித்தார்.சங்க துணைத் தலைவர் ராமச்சந்திரன், கூட்டமைப்பின் துணைத் தலைவர் மணி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மத்திய அரசு குறைந்தபட்ச தேயிலைத் தூள் ஏலத் தொகையாக 200 ரூபாய்க்கு குறையாமல் விற்பனை செய்திட உரிய சட்டத்தினை இயற்றிட வேண்டும். மத்திய அரசின் சுதேசி பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற கொள்கையின்படி நீலகிரி தேயிலை தூளை ஊக்குவிக்க வேண்டும். உள்நாட்டிலேயே தேயிலை தூள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால் வெளிநாட்டிலிருந்து தேயிலை தூள் இறக்குமதிக்கு மத்திய அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும். தேயிலைத் தூள் விற்பனைக்கான விலையை தனியார் மற்றும் அரசு கூட்டுறவு தேயிலை நிர்வாகத்தினரே நிர்ணயிக்க மத்திய அரசும்,தேயிலை வாரியமும் உரிய சட்டம் இயற்றிட வேண்டும். தனியார் எஸ்டேட் கம்பெனி தொழிற்சாலைகள் விற்பனை செய்யும் தேயிலை தூளின் விலை நிலவரத்தை மாதாந்திர சராசரி விலை நிர்ணயத்திற்கு உட்படுத்த வேண்டும். கடந்த அக்., 2024 ம் ஆண்டு தேயிலை வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர விலை, 1.72 கோடி ரூபாயை உறுப்பினர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சங்க துணைச்செயலாளர் பூபதிகண்ணண், சங்க ஆலோசகர்கள் பெள்ளி, சிவசங்கரன், சிவலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

