தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நுாலகத்திற்கு சொந்த கட்டடம் கட்டி தர தீர்மானம்

 நுாலகத்திற்கு சொந்த கட்டடம் கட்டி தர தீர்மானம்

 நுாலகத்திற்கு சொந்த கட்டடம் கட்டி தர தீர்மானம்


ADDED : மார் 14, 2026 06:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 06:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலுார்: பந்தலுார் அருகே கொளப்பள்ளி நுாலகத்திற்கு, அரசு சொந்த கட்டடம் கட்டி தர வலியுறுத்தப்பட்டு உள்ளது.

கொளப்பள்ளி கிளை நுாலக வாசகர் வட்ட கூட்டம், தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

நுாலகத்திற்கு மின் இணைப்பு இல்லாததால், வாசகர்கள் மற்றும் போட்டி தேர்வுகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாசகர் வட்டம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மின்சாரம் இணைப்பு வழங்க மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து வலியுறுத்துவது.

கொளபள்ளி மையப்பகுதியில் அரசு நிலத்தை ஆய்வு செய்து அங்கு நுாலகத்திற்கு சொந்த கட்டடம் கட்டி தர வலியுறுத்துவது. வாசகர் வட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், முருகராஜ், கணபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நுாலகர் முத்துசாமி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us