sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பள்ளி நேரத்தில் கனரக வாகனம் இயக்க கட்டுப்பாடு: ஓட்டுனர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு

/

பள்ளி நேரத்தில் கனரக வாகனம் இயக்க கட்டுப்பாடு: ஓட்டுனர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு

பள்ளி நேரத்தில் கனரக வாகனம் இயக்க கட்டுப்பாடு: ஓட்டுனர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு

பள்ளி நேரத்தில் கனரக வாகனம் இயக்க கட்டுப்பாடு: ஓட்டுனர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு


UPDATED : ஆக 20, 2025 06:26 AM

ADDED : ஆக 19, 2025 09:06 PM

Google News

UPDATED : ஆக 20, 2025 06:26 AM ADDED : ஆக 19, 2025 09:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:'கூடலுார் நாடுகாணி-பந்தலுார் சாலையில் பள்ளி நேரத்தில் வாகன நெரிசலை தவிர்க்க, கனரக வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.

கூடலுார் நகர் வழியாக உள்ளூர் வாகனங்களை தவிர, கேரளா- கர்நாடக இடையே அதிகளவில் வாகனங்கள் இயக்கி வருகின்றனர். இதனால், நகரில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக, மாணவர்கள், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

காலை நேரத்தில், ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, காலை, 8:30 முதல் 9:30 வரை கோழிக்கோடு சாலை வழியாக நகருக்கு வரும் கனரக வாகனங்களை இரும்புபாலம் பகுதியில் நிறுத்த வேண்டும்.

கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்கள், மைசூரு தேசிய நெடுஞ்சாலை மார்த்தோமா நகர் பகுதியில் நிறுத்தி, 9:30 மணிக்கு மேல் இயக்க, போலீசார் அனுமதித்து வருகின்றனர். வாகனங்கள் நிறுத்துவதை போலீசார் தினமும் கண்காணித்து வருகின்றனர்.

பெற்றோர் கூறுகையில், 'இதே போன்று, நாடுகாணி-பந்தலுார் இடையே காலை நேரத்தில், வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால், மாணவர்கள் பள்ளி செல்ல தாமதம் ஆகிறது. இதனை தவிர்க்க, கூடலுார் போன்று, கேரளாவிலிருந்து, பந்தலுார் செல்லும் கனரக வாகனங்களை காலை, 8:30 முதல் 9:30 மணி வரை நாடுகாணி பகுதியில் நிறுத்தி அதன்பின் இயக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us