/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளியில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு
/
பள்ளியில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு
ADDED : செப் 15, 2025 08:54 PM
கோத்தகிரி; கோத்தகிரி மெட்டுக்கல் அரசு உண்டு உறைவிட பள்ளியில், 2025- 2027ம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மாரி தலைமை வகித்தார். வார்டு உறுப்பினர் துரை முன்னிலை வகித்தார். அதில், பெற்றோர் உறுப்பினர் நதியா தலைவராகவும், ஆனந்தி துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட பார்வையாளராக, ஒரசோலை அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் பங்கேற்று நிகழ்வுகளை பதிவு செய்து நெறிப்படுத்தினார்.
தொடர்ந்து, 'பள்ளி மாணவர்கள் கல்வித்திறன் மற்றும் பள்ளி வளர்ச்சிக்கு பாடுபடுவது,' என, உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஆசிரியர் பிருந்தா நன்றி கூறினார்.