தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஆயுத படைகளில் சேர மாணவியர் முன்வர வேண்டும்; ஓய்வு பெற்ற கர்னல் அழைப்பு

 ஆயுத படைகளில் சேர மாணவியர் முன்வர வேண்டும்; ஓய்வு பெற்ற கர்னல் அழைப்பு

 ஆயுத படைகளில் சேர மாணவியர் முன்வர வேண்டும்; ஓய்வு பெற்ற கர்னல் அழைப்பு


ADDED : பிப் 24, 2026 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 06:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார் புனித ஜோசப் கான்வென்ட் பள்ளியில், 125வது ஆண்டு விழா நடந்தது.

பள்ளி தாளாளர் மரியா கொரெட்டி, முதல்வர் அலெக்ஸ் ராணி முன்னிலையில், நடந்த இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, ராணுவ மருத்துவர் கர்னல் (ஓய்வு) ரவிசங்கர் பேசியதாவது:

பெண் குழந்தைகளை பெற்றவர்கள், திருமணத்தை மட்டுமே வாழ்க்கையின் முக்கிய அம்சமாக, அவசரப்படுத்தி மாற்ற கூடாது. அவர்களின் திறமை, ஆற்றல்களை வளர்க்க அனுமதிக்க வேண்டும்.

பொறியியல், மருத்துவம், சட்டம், விளையாட்டு மட்டுமின்றி, சமையல் கலை உட்பட தங்களது தொழிலில் மகிழ்ச்சியாக இருந்தால், நாட்டிற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் சொத்தாக மாறுவர்.

இப்போது கார்ப்பரேட் உலகம் முதல் ஆயுதப்படை வரை அனைத்து துறைகளிலும் பெண்கள் முத்திரை பதித்து வருகின்றனர். மருத்துவம், செவிலியர் துறைகளில் மட்டுமில்லாமல் ஆயுதப் படைகளின் எந்த ஒரு பிரிவிலும் பெண்கள் சேரலாம் என்பதால் இதனை பயன் படுத்தி கொள்ள வேண்டும்.

நாட்டில் இன்னும் பல கோடி குழந்தைகள் அடிப்படை கல்வி கூட பெறாமல் உள்ளனர். 37.2 சதவீத சிறுமிகள் மட்டுமே உயர்நிலை பள்ளியை கல்வியை தொடர்கின்றனர். இப்பகுதிகளில் கல்வி பயிலும் மாணவிகள் அதிர்ஷ்டசாலிகள். நீங்கள் நவீன உலகின் கவனச் சிதறல்களுக்கு மாணவிகள் அடிமையாகி விடக்கூடாது. குறிப்பாக சமூக ஊடகங்களில் உங்களின் செயல்பாடுகள் குறித்து மிகவும் கவனமாக இருங்கள். அவை உங்களை எளிதாக அழிக்கும் அபாயம் உள்ளது.

வாழ்வில் எந்த உயரிய நிலையை அடைந்தாலும் உங்களுக்கு உதவியவர்கள் மற்றும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு, சமூகத்தின் வாயிலாக திருப்பிக் கொடுப்பதை கடமையாக கொள்ள வேண்டும். உங்கள் மீதும் இறைவன் மீதும் நம்பிக்கை வையுங்கள். உங்களால் அனைத்தையும் சாதிக்க முடியும்.

இவ்வாறு டாக்டர் ரவிசங்கர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us