/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வேலை வாங்கி தருவதாக ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் ரூ. 16 லட்சம் மோசடி: இருவர் கைது ; ஒருவர் தலைமறைவு
/
வேலை வாங்கி தருவதாக ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் ரூ. 16 லட்சம் மோசடி: இருவர் கைது ; ஒருவர் தலைமறைவு
வேலை வாங்கி தருவதாக ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் ரூ. 16 லட்சம் மோசடி: இருவர் கைது ; ஒருவர் தலைமறைவு
வேலை வாங்கி தருவதாக ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் ரூ. 16 லட்சம் மோசடி: இருவர் கைது ; ஒருவர் தலைமறைவு
ADDED : ஜூலை 09, 2025 06:57 AM

ஊட்டி; மகனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி, ஓய்வு பெற்ற தாசில்தாரிடம்,16 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியை சேர்ந்த சிக்கனுமன், வருவாய்துறையில் தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது மகன் இன்ஜினியரிங் முடித்து விட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தார்.
இதை அறிந்த மஞ்சூர் அருகே கரியமலை கிராமத்தை சேர்ந்த சோமு,49, என்பவர் சிக்கனுமனை தொடர்பு கொண்டு அவருடைய மகனுக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார். மகனுக்கு, அரசு வேலை கிடைக்கும் என்ற ஆசையில் சிக்கனுமன் சோமுவிடம்,16 லட்சம் ரூபாய் கொடுத்துளார்.
சோமு கூறியப்படி அரசு வேலை வாங்கி தரவில்லை. அதிருப்தியடைந்த சிக்கனுமன் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். பணத்தை திருப்பி கொடுக்காத சோமு, பல்வேறு காரணங்களை கூறி நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்துள்ளார்.
ஏமாற்றமடைந்த சிக்கனுமன் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், 'பண மோசடியில் மூன்று பேர் ஈடுபட்டுள்ளனர்,' என்பது தெரியவந்தது. டி.எஸ்.பி. சக்திவேல், உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் கமலேஷன் தலைமையில், எஸ்.ஐ., பூர்ண சந்திரபாரதி உள்ளிட்ட தனிப்படை போலீசார் மோசடி நபர்களை தேடி வந்தனர்.
டி.எஸ்.பி. சக்திவேல் கூறுகையில்,''இந்த, 16 லட்சம் ரூபாய் மோசடியில் மூன்று பேர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சோமு, அவருக்கு உடந்தையாக இருந்த குமாரி லதா,40, ஆகியோரை கோவையில் கைது செய்துள்ளோம். தலைமறைவாக உள்ள சிவராமன் என்பவதை தேடி வருகிறோம். இவர் பலரிடம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இவரால் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்,'' என்றார்.