/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரவோடு இரவாக சில்வர் ஓக் மரம் வெட்டி கடத்தல் கண்டுகொள்ளாத வருவாய் மற்றும் வனத்துறையினர்
/
இரவோடு இரவாக சில்வர் ஓக் மரம் வெட்டி கடத்தல் கண்டுகொள்ளாத வருவாய் மற்றும் வனத்துறையினர்
இரவோடு இரவாக சில்வர் ஓக் மரம் வெட்டி கடத்தல் கண்டுகொள்ளாத வருவாய் மற்றும் வனத்துறையினர்
இரவோடு இரவாக சில்வர் ஓக் மரம் வெட்டி கடத்தல் கண்டுகொள்ளாத வருவாய் மற்றும் வனத்துறையினர்
ADDED : ஆக 23, 2025 02:57 AM

கோத்தகிரி: கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில் உரிய அனுமதி இல்லாமல், சில்வர் மரங்கள் வெட்டி, இரவோடு இரவாக கடத்தப்படுவது தொடர்கிறது.
கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில், கக்குச்சி, கூக்கல் மற்றும் துானேரி ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில், பட்டா மற்றும் வருவாய் துறைக்கு சொந்தமான நிலங்களில், சில்வர் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. முதிர்ந்த மரங்கள் விவசாயிகளின் தேவைக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது.
இதனை சில வியாபாரிகள், அடிமாட்டு விலைக்கு வாங்கி, கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் சாமில்களில் விற்பனை செய்து லாபம் சம்பாதித்து வருகின்றனர். 'சில இடங்களில் மரங்கள் வெட்டுவதற்கு, சம்பந்தப்பட்ட அரசு துறைகளில் இருந்து, முறையான அனுமதி பெறப்படுவதில்லை,' என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மரங்கள் வெட்டுவதற்கு அனுமதி பெறும் பட்சத்தில், பொதுவாக பகல் நேரத்தில் மரம் வெட்டப்பட்டு லாரிகளில் கொண்டு செல்வது வழக்கம். ஆனால், இரவு நேரத்தில் மரங்களை வெட்டி லாரியில் ஏற்றி மறைவான பகுதிகளில் நிறுத்தி நள்ளிரவில் கடத்தப்படுவது தொடர்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஒன்னதலை - தும்மனட்டி சந்திப்பில், 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் லாரிகளில் மரங்களை ஏற்றியது உறுதி செய்யப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறுகையில்,'இரவில் மரம் வெட்டி கடத்தப்படுவது குறித்து வனத்துறை; வருவாய்துறைக்கு உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்தாலும் யாரும் கண்டு கொள்ளவதில்லை,' என்றனர்.
இந்நிலையில், நேற்று மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவுப்படி, கட்டபெட்டு வனச்சரகர் சீனிவாசன் உட்பட எட்டுபேர் மரம் வெட்டப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
வனத்துறையினர் கூறுகையில்,' இப்பகுதியின் ஆய்வறிக்கை வன அலுவலரிடம் அளிக்கப்படும். அதன் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.