/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம் புறக்கணித்த வருவாய் துறை ஊழியர்கள்
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம் புறக்கணித்த வருவாய் துறை ஊழியர்கள்
உங்களுடன் ஸ்டாலின் முகாம் புறக்கணித்த வருவாய் துறை ஊழியர்கள்
உங்களுடன் ஸ்டாலின் முகாம் புறக்கணித்த வருவாய் துறை ஊழியர்கள்
ADDED : செப் 30, 2025 10:15 PM

பந்தலுார்,; உங்களுடன் ஸ்டாலின் முகாம், பணிகளை வருவாய்த்துறை ஊழியர்கள் புறக்கணித்தனர்.
கிராமங்கள் தோறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதில், அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்பதுடன், பொதுமக்களின் குறைகளுக்கு உடனே தீர்வு மற்றும் ஆய்வு செய்து, 45 நாட்களுக்குள் தீர்வு காண்பது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முகாமில் கொடுக்கப்படும் விண்ணப்பங்களுக்கு, உடனடியாக ஆய்வு செய்து தீர்வு காண உயரதிகாரிகள், வருவாய்த்துறை ஊழியர்களை நிர்பந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், மன உளைச்சலுடன் பணியாற்றி வருவதாகவும் புகார் தெரிவித்த வருவாய்த்துறை ஊழியர்கள், நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை புறக்கணித்தனர். தாசில்தார் மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மட்டும் வருவாய்த்துறை சார்பில் பங்கேற்றனர். இதனால், தற்காலிக பணியாளர்களை கொண்டு, விண்ணப்பங்களை பெற்றனர்.
ஆய்விற்கு உரிய விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஒப்படைத்தனர். அதில், ஊராட்சி ஒன்றியம் சார்பில், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு உடனடி அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தாசில்தார் சிராஜூ நிஷா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சலீம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஷைனி, பணியாளர் சஜீத், சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.