/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புல்வெளியை சோலைவனமாக மாற்றும் முயற்சியில் வருவாய் துறை
/
புல்வெளியை சோலைவனமாக மாற்றும் முயற்சியில் வருவாய் துறை
புல்வெளியை சோலைவனமாக மாற்றும் முயற்சியில் வருவாய் துறை
புல்வெளியை சோலைவனமாக மாற்றும் முயற்சியில் வருவாய் துறை
ADDED : அக் 09, 2024 09:59 PM
பந்தலுார் : பந்தலுார் அருகே அத்திச்சால் பழங்குடியின கிராமத்தை ஒட்டிய, புல்வெளியை சோலைவனமாக மாற்றும் முயற்சியில் வருவாய் துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
பந்தலுார் மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில், வனம் மற்றும் அதனை ஒட்டிய கிராமங்கள், புல்வெளிகள் அமைந்துள்ளன. வனப்பகுதிகளில் அந்நிய தாவரங்களின் வளர்ச்சியால், வன விலங்குகளுக்கு தேவையான உணவு பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
மேலும், வனங்கள் அழிந்து புல்வெளிகளாக மாறி வருவதால், காலநிலையிலும் மாற்றம் உருவாகி வருகிறது. இந்நிலையில், பந்தலுார் சுற்றுவட்டாரப்பகுதி புல்வெளிகளை, சோலைவனமாக மாற்றும் முயற்சியில் வருவாய் துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
முதல் கட்டமாக அத்திச்சால் பழங்குடியின கிராமத்தை ஒட்டிய, வருவாய் துறைக்கு சொந்தமான புல்வெளியில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார்.
பழங்குடியின சங்க தலைவர் கைமதாஸ் கூறுகையில், ''மரக்கன்றுகளை நடவு செய்து, அத்திச்சால் பழங்குடியின கிராமத்து இளைஞர்களிடம் ஒப்படைக்கும் நிலையில், இதனை சிறந்த சோலைவனமாகவும், பூங்காவாகவும் மாற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

