/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறையினர் போராட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறையினர் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறையினர் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறையினர் போராட்டம்
ADDED : ஜூன் 26, 2025 09:19 PM
ஊட்டி; மாநிலம் முழுவதும் காலி பணியிடங்களை நிரப்புதல் உட்பட 7 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடந்தது.
இதன் ஒரு பகுதியாக, ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த போராட்டத்திற்கு நீலகிரி மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் கூறுகையில், 'வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவைத் துறையில் பணிபுரிந்துவரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் நடைபெறும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும், சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசுஉடனே இயற்ற வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்,' என்றனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தலைவர் தீபக் மனோ, கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்க தலைவர் சுரேஷ் பாபு , நில அளவை சங்கத்தை சேர்ந்த அப்துல் காதர் உட்பட பலர் பங்கேற்றனர்.